181
பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மொகமது ஹபீசுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்துவீச்சு ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக இருப்பதாக தெரிவித்தே அவருக்கு குறித்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கை அணிக்கெதிரான போட்டியின்போது மொகமது ஹபீஸ் வீசிய பந்து வீச்சு குறித்த சந்தேகம் எழுந்ததனைத் தொடர்ந்து இதுகுறித்து ஐ.சி.சி.யில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது பந்துவீச்சு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அது ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக இருப்பதாக நிருபிக்கப்பட்டதனை அடுத்து அவருக்கு 24 மாதங்கள் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Spread the love