ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
அத்துடன் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் ஐரோபிபய நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அடிமைகளாக 400 இலிருந்து 600 டொலர்கள் வரையில் விற்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்படும் அகதிகள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.