சொகுசு கார் இறக்குமதி மோசடி தொடர்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிபிஐ தொடர்ந்த வழக்கில நடராஜன் உள்ளிட்டோர் மீது விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் 1994 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், 1994ல் வெளியான புதிய ரக கார் என தெரிய வந்ததயைடுத்து வரி 1.06 கோடி ரூபா வரிஏய்ப்பு செய்ததாக நடராஜன், உள்ளிட்ட மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் வழக்கின் இறுதி விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது . அதில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் நடராஜன், வி.என்.பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது விதித்த 2 ஆண்டு தண்டனையை உறுதிப்படுத்தியது.