சிம்பாப்வே ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ரொபேர்ட் முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் Zanu-PF கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை ஜனாதிபதி எமர்சன் மனங்காக்வாவை நியமித்தும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிம்பாப்வே ஜனாதிபதி முகாபே இராணுவத் தளபதியை சந்திக்க உள்ளார்
Nov 19, 2017 @ 03:16
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிம்பாப்வேயின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே, அந்நாட்டு இராணுவத் தளபதியை சந்திக்க உள்ளார். பதவி விலகுமாறு செய்யுமாறு கோரி முகாபேக்கு எதிராக கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர், முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்பேயின் ஆளும் கட்சியான Zanu-PF கட்சியும் தமது ஸ்தாபகத் தலைவரான முகாபேவை பணி நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. 93 வயதான முகாபே மிக நீண்ட காலமாக சிபம்பாப்வேயின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாபே பதவி விலக வேண்டுமெனக் கோரி சிம்பாப்பேவயில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.