குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையிலான எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை தொடர்பில் அடுத்த மாதம் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
தந்திரோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எட்கா தொடர்பில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துரித கதியில் அபிவிருத்தி அடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணி வகிப்பதாகவும் இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் நன்மை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.