163
முல்லேரியா காவல்துறைப் பிரிவில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
54 வயதான அவர், தனக்கு கடமை நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்த காவல்துறை பரிசோதகருக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவிருந்தநிலையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எடின்பது குறிப்பிடத்தக்கது
Spread the love