குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியும் , 06 இலட்ச ரூபாய் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் , 10 தண்ட பணம் வழங்க வேண்டும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்.காவல்துறைப் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை வன்புணர்ந்து தாயாக்கியமை தொடர்பில் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்பையில் , குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்.மேல் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யபப்ட்டது. அதன் அடிப்படையில் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தண்டனை தீர்ப்புக்கு திகதியிடப்பட்டது.
அதன் போது குறித்த வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இருப்பதாக எதிரிக்கு எதிராக மரபணு அறிக்கையை முன்வைத்தார். அதேவேளை எதிரி மன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி எதிரி சார்பில் கருணை மனுவை மன்றில் முன் வைத்தார்.
அதனை தொடர்ந்து , சிறுமியை வன்புணர்ந்த குற்ற சாட்டுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் தவறின் , இரண்டாண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். தண்டப்பணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தவறின் 06 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.