முத்தலாக் நடைமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வர இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை உருவாக்க அமைச்சரவை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டம் அங்கீகாரமற்றது என அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்த உச்ச நீதிமன்றம் முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உடனடி முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.