குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது ரஸ்ய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு சோச்சீ குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது ரஸ்ய வீர வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி சிலருக்கு ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ரஸ்யாவின் பிரதி பிரதமர் விற்றலி முற்கோ ( Vitaly Mutko )இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஊக்க மருந்து பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுக்களில் ரஸ்யா குற்றமிழைக்கவில்லை எனவும், இந்த சர்ச்சைகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், உலக ஊக்க மருந்து தடை அதிகாரசபையுமே பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.