Home இலங்கை மஹிந்தவுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

மஹிந்தவுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு அமைச்சர்கள் இவ்வாறு மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜோன் செனவிரட்ன ஆகியோரே இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மைத்திரி தரப்பினையும்  மஹிந்த தரப்பினையும் இணைக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சவார்த்தைகள் பூரண  வெற்றி அளிக்காவிட்டாலும் சாதக நிலைமைகள் காணப்படுவதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

படம் டெயிலிமிரர்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More