இலங்கை பிரதான செய்திகள்

வடகொரியாவுடன் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது – இலங்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவுடன் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடு என்ற வகையில், வடகொரியா தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்த தீர்மானத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்திருந்தது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வாழும் அல்லது வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் எந்த வகையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களிலும் வடகொரியாவுடன் ஈடுபட அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.  வடகொரியாவிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.