Home இலங்கைபிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்படும் – கூட்டு எதிர்க்கட்சி

பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்படும் – கூட்டு எதிர்க்கட்சி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிபந்தனை அற்ற அடிப்படையில் பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிக்கும் ஜனாதிபதியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி குறித்து ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் ஆத்திரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி மீது சிலர் சேறு பூசி வருவதாகவும் அந்தப் பிரச்சினைக்கு எதிராக தாம் குரல் கொடுக்க உள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More