குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பொம்மை வெளி பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் திட்டமிட்ட முறையில் கொண்டு வந்து போடப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் தனக்கு உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.பொம்மை வெளி பகுதியில் பத்து துப்பாக்கிகள் , பெருமளவான துப்பாக்கி ரவைகள் என்பன நேற்றைய தினம் மீட்கப்பட்டு உள்ளன. இதுவரை காலமும் இல்லாதவை எப்படி நேற்றைய தினம் அப்பகுதிக்கு வந்தன என்பதில் சந்தேகம் உள்ளது.
தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படும் நிலையில் பெருந்தொகையான ஆயுதங்கள் யாழில் கண்ணெடுக்கப்பட்டு உள்ளன. அதன் ஊடாக வடக்கில் இன்னமும் ஆயுத கலாச்சாரம் உள்ளது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கி மாவீரர் நாள் நிகழ்வுகளையும் அவ்வறான தோற்றபாட்டுக்குள் உள்ளடக்குவதற்கான முயற்சிகளாக கூட இவை இருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.