Home இலங்கைதென்கொரிய – இலங்கை ஜனாதிபதிகள் எதிர்பாரா சந்திப்பு

தென்கொரிய – இலங்கை ஜனாதிபதிகள் எதிர்பாரா சந்திப்பு

by admin


தென்கொரியாவிற்கான அரசமுறை  பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேனவுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுக்குக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையிலுமான  உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி   தனது பயணத்தின் முதற்கட்டமாக சியோல் நகரில் அமைந்துள்ள ஜொக்யேசா புராதன பௌத்த விகாரையில் வழிபாடு செய்வதற்காக இன்று   பிற்பகல்  சென்றிருந்தார்.

இந்தநிலையில்      தென்கொரிய ஜனாதிபதி   அங்கு வருகைதந்து ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சினேகபூர்வமாக வரவேற்றுள்ளார்.   ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   மூன்று நாள் அரசமுறை பயணமாக   தென்கொரியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More