Home பிரதான செய்திகள்அஸ்வின்தான் தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் – முரளிதரன்

அஸ்வின்தான் தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் – முரளிதரன்

by admin

அஸ்வின்தான் தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என  இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்  தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில்  8 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் விரைவாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை  அஸ்வின் நிகழ்த்தியுள்ளார்.   இது தொடர்பில்   அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலேயே     முரளிதரன் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

தற்போது அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை எனினும் விரைவில் அவர் ஒரு நாள்போட்டிகளில் இடம்பெற்று ஆச்சரியங்களை புரிவார் என  நம்புகிறேன் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.  அவுஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை பெற்று நீண்ட காலமாக சாதனையை தன் வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More