குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் கடற் பகுதிகளில் கடும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டை சுற்றியுள்ள கடற் பகுதியில் இவ்வாறு கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, கடலுக்கு செல்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் கோரியுள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாவட்டங்களின் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரியுள்ளார்.