141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயற்சித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடப்பு செல்வபுரம் பகுதியில், படகு மூலம் நியூசிலாந்திற்கு செல்ல முயற்சித்த மூன்று பேரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
Spread the love