Home இலங்கைபரீட்சை மோசடிகளை தடுக்க விசேட வழிமுறை

பரீட்சை மோசடிகளை தடுக்க விசேட வழிமுறை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பரீட்சை மோசடிகளை தடுப்பதற்கு விசேட வழிமுறையொன்று பின்பற்றப்பட உள்ளது. ரேர்ன் கீ சிஸ்டம்  ( Turn key system ) என்ற முறையின் அடிப்படையில் இந்த புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த விசேட திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சை வினாத்தாள் அச்சிடுதல் மற்றும் பொதியிடல் என்பனவற்றை ஒரே கருவியின் ஊடாக மேற்கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சையின் இரகசியத்தன்மையை பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பில் கருவியொன்றை கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கருவி கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More