குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்கா வடகொரியாவை தூண்டி வருவதாக ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது. ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ( Sergei Lavrov )இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வடகொரியா அணுவாயுதங்களை செய்வதனை தூண்டும் வகையிலும், வடகொரியாவை கோபப்படுத்தும் வகையிலும் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா மீதான தடைகள் எந்த வகையிலும் நன்மை அளிக்காது எனவும், பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகளின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா எதற்காக வடகொரியாவுடன் மோதி முரண்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியான அணுகுமுறைகளை பின்பற்றாது அமெரிக்கா முரண்பாடுகளை வளர்த்து வருவதாகவும் இது ஆரோக்கியமான ஓர் நிலையல்ல எனவும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.