அணுஆயுத தாக்குதல் திறன் கொண்ட, 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் திட்டத்தை இந்தியா நேற்று ஆரம்பித்தது . கப்பற்படை தினத்தை முன்னிட்டு, இது குறித்து டெல்லியில், கருத்து தெரிவித்த கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா,
அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை கப்பற்படைக்கு கிடைக்கும். என சுனில் கூறினார்.
குறிப்பாக இந்திய – பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, கடல் பகுதியில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.