Home இந்தியாஏ.ரீ.எம் அட்டை மோசடியுடன் தொடர்புடைய 5 பேர் இந்தியாவில் கைது

ஏ.ரீ.எம் அட்டை மோசடியுடன் தொடர்புடைய 5 பேர் இந்தியாவில் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஏ.ரீ.எம் அட்டை மோசடியுடன் தொடர்புடைய ஐந்து பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரும் சுமார் பத்து லட்சம் இந்திய ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மிகவும் நூதமான முறையில் இரகசிய இலக்கங்களை பெற்றுக்கொண்டு அட்டைகளை தயாரித்து அதன் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசடிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த அல்பிரட் பாலகுமார் மற்றும் மும்பையைச் சேர்ந்த உமேஸ் ஆகியோரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இருவருமே ஏ.ரீ.எம். அட்டைகளை மோசடியாக தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்ட போதிலும், இலங்கை மற்றும் மும்பையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More