Home இலங்கைபுதிய அரசியலமைப்பும் நாமும்

புதிய அரசியலமைப்பும் நாமும்

by admin
Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT

சிந்தனைக் கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை 09.12.2017 காலை 09மணிமுதல் 12 மணிவரை 121, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.

மேற்படி கருத்தரங்கில் ”புதிய அரசியலமைப்பும் நாமும்” எனும் தலைப்பில், திருமதி.கோசலை மதன் (சட்டத்தரணி) (விரிவுரையாளர், சட்டத்துறை, யாழ். பல்கலைக்கழகம்) திரு.சி.கிருஷ்ணானந்தன், (முன்னாள் பிரதிசெயலாளர், வடகீழ் மாகாணம்) அ10கியோர்; கருத்துரை வழங்கவுள்ளனர்.

கருத்துரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெறும்.

மேற்படி கருத்தரங்கு புதிய அரசியல் அமைப்பில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய அறிவுப் பகிர்வை பிரதான நோக்கமாகக் கொண்டதாகும். மேலும், வளவாளர்களுடனான கலந்துரையாடல் மூலம் புதிய அரசியல் அமைப்புப் பற்றிய தெளிந்த அறிவை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இந் நிகழ்வுக்கு ஆர்வாலளர்கள் எவரும் வருகைதந்து பயன் பெறலாமெனசிந்தனைக்கூட பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் தெரிவிக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More