ஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை ஓகி புயலாகி மாறி கன்னியாகுமரி மாவட்டத்தை உருக்குலைத்துப் போட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர்பாக தெளிவான தகவல் எதுவும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படாமை தொடர்பில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளா மாநில முதல்வர் தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவர்கள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து வரும் நிலையில் தமிழக அரசு எத்தனை பேர் மீன்பிடிக்க போனார்கள்? எத்தனை பேர் எங்கெங்கே கரை ஒதுங்கியுள்ளனர்? எஞ்சிய மீனவர்கள் நிலைதான் என்ன? என்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.