முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய ஜனாதிபதி டிரம்ப் விதித்திருந்த பயணத்தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த அந்நாட்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், சாட், இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாட்டு பயணிகளுக்கு எதிராக பெறப்பட்ட உத்தரவுகள் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறன், பயணத்தடை குறித்து அவர் பிறப்பித்த உத்தரவின் மூன்றாவது வரைவை இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் ஏழு நீதிபதிகள், நேற்றைய தினம் (4.12.17) இந்த பயணத்தடை மீது கீழவை நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த உத்தரவுகளை விலக்க ஒப்புக்கொண்டனர். நீதிபதிகள் ரூத் படேர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர் ஆகியோர் மட்டுமே ஜனாதிபதியின் பயணத்தடை மீதான தடை தொடர வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருந்தனர். தேசிய குடிவரவு சட்ட நிலையத்தின் சட்ட இயக்குநரான கேரன் டம்லின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘பேரழிவான செய்தி’ என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

US President Donald Trump signs Executive Orders in the Hall of Heroes at the Department of Defense Friday, Jan. 27, 2017 in Arlington, Va. (Olivier Douliery/Abaca Press/TNS) 1196704