குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் இணைக்கும் முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ரதன தேரர் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஓர் கட்டமாக ரதன தேரர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும் இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருடன் கலந்தாலோசனை செய்யாது எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என பசில் ராஜபக்ஸ, அதுரலிய ரதன தேரருக்கு கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.