2017 ஆம் ஆண்டில் ‘மெர்சல்’ ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் ருவிட்டரில் அதிகளவில் பேசப்பட்டதாகவும், அதிகமானவர்களை கவர்ந்துள்ளதாகவும்,. இந்த படங்கள் பற்றியே அதிகமான முறையில் ருவிட்டரில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும், ருவிட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.
மெர்சல் படத்தை 3 தினங்களில் 17 லட்சம் பேர் ருவிட் செய்துள்ளனர். மெர்சல் படத்தில் GST. பற்றி விமர்சிக்கப்பட்டது. இதனால் இதுபற்றி அதிக அளவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளd. ‘பாகுபலி 2’ படம் மிகவும் பிரமாண்டமாக இருந்ததால் அது பற்றியும் அதிகம் பேசப்பட்டது. அதேபோல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது போஸ்டர் 68 ஆயிரத்திற்கு மேல் றீ ருவிட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஜல்லிக்கட்டு முத்தலாக், GST. சாமியார் குர்மித்ராம் கைது, பணமதிப்பு நீக்கத்தின் முதலாண்டு தினம் ஆகிய சம்பவங்கள் குறித்தும் அதிகமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக ருவிட்டர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.