Home இலங்கைசர்வதேச பயங்கரவாதிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை

சர்வதேச பயங்கரவாதிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச பயங்கரவாதிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பது குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்தும் வகையில் விசேட பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் ஆகியனவற்றுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு நேரடியாக பாதிப்புக்கள் எமக்கு கிடையாது என்ற போதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More