குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாநாகரசபை மேயர் வேட்பாளராக அசாத் சாலியை போட்டியிடச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் சார்பில் போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கோரியதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கூட உள்ள கட்சியின் மத்திய செயற்குழு இது குறித்து தீர்மானிக்க உள்ளது. அசாத் சாலி இதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து கொழும்பு மாநாகரசபையின் பிரதி மேயராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசாத் சாலி தேசிய சமாதான முன்னணியின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.