ஏமனில் கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. ஏமனில் தலைநகரம் சானாவில் கடந்த ஒரு வாரமாக அரசபடைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.
ஏமனின் 22 ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த அலி அப்துல்லா சலே கடந்த திஙக்ட்கிழமை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அப்துல்லா, அண்மையில் சவுதி கூட்டுப் படைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல்லா கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.