161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடனான பேச்சில் இணக்கம் ஏற்பட்டு கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும் எனும் நம்பிக்கை தனக்கு உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
பங்காளி கட்சிக்களுடன் ஏற்பட்டு உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும். ஆசன பங்கீட்டுங்காக கூட்டமைப்பு பிளவு பட்டது. பிரிந்து சென்றது என இருக்க கூடாது.
முதாலாம் இரண்டாம் சுற்று பேச்சில் இணக்கம் ஏற்பட்டவில்லை ஆசன பங்கீடு தொடர்பில் முரண்பாடு இருந்தது. கடந்த 5 ஆம் திகதி இரவு ரெலோ கூடி தமிழரசுடன் இணைய மாட்டோம் என அறிவித்தது,
அந்நிலையில் ரெலோ கட்சியின் தலைவர் நேற்றைய தினம் புதன் கிழமை என்னோடு இரண்டு மணி நேரம் பேசினார். அதில் பல இணக்க பாடுகள் எட்டப்பட்டன. பிரச்சணைகளை சமூகமாக தீர்க்க முயல்கின்றோம். அனைவருடன் கலந்தாலோசித்து இன்று இரவுக்குள் அல்லது நாளைய தினம் மதியத்திற்குள் பேசி முடிப்போம் அந்த பேச்சில் இணக்கம் ஏற்பட்டு சேர்ந்தே பயணிப்போம்.என நம்புகின்றேன்.
ரொலோவுடன் ஏற்பட்டு உள்ள முரண்பாட்டை தீர்த்த பின்னர் புளொட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொளோம். சமரசமாக செல்வோம். சேர்ந்தே பயணிப்போம். என மேலும் தெரிவித்தார்
சர்வதேச ஆதரவை தக்க வைக்கும் நோக்குடனையே கூட்டமைப்பு பயணிக்கின்றது. – சுமந்திரன்
Dec 7, 2017 @ 15:03
கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளின் ஆதரவை தக்க வைக்க வேண்டும். அதற்கு ஆதரவான நகர்வுகளையே மேற்கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை புதிய கூட்டணி விமர்சிக்கின்றது. புதிய கூட்டணி தேர்தலுக்காக கூடிய கூட்டணி இப்படியானதுகள் தேர்தலை இலக்கு வைத்து செய்யும் செயற்பாடுகளே அவர்கள் சொல்வதெல்லாம் தேர்தலுக்காக சொல்வது என்பது மக்களுக்கே புரியும்.
அரசியல் தீர்வு வெற்றி பெறுமா இல்லையா என சாத்திரம் பார்க்கமுடியாது. தற்போது இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. அது கூட ஒரு முன்னேற்றகரமான விடயம் தான். இப்படி சில முன்னேற்றகரமான செயலை அரசாங்கம் செய்யும் பொது அதனை எதிர்த்து தடை போட முடியாது.
மஹிந்த காலத்தில் எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளும் நடைபெறாத போது , தற்போது இந்த அரசாங்கம் அதனை செய்கின்றது. முன்னேற்றகரமாக செயற்படுபவர்களுக்கு எதிராக செயற்பட்டு அவர்களுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. எல்லாத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டும் இருக்க முடியாது.
எங்களது செயற்பாடு சர்வதேச நாடுகளின் ஆதரவினை தக்க வைக்க வேண்டும் என்பதே. அதற்கு ஆதரவான நகர்வுகளையே மேற்கொள்கின்றோம். என மேலும் தெரிவித்தார்.
Spread the love