146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான ஈரானிய தூதுவர் முகம்மது ஸேய்ரி அமிரானி ( Mohammad Zaeri Amirani ) இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஒருவருக்கு ஒருவர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
Spread the love