167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனப் பேரவையினால், ஜனாதிபதியிடம் இந்தப் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. காணாமல் போனோர் அலுவலகத்திற்காக ஏழு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, மகளிர் உரிமை செயற்பாட்டாளரான நிமால்கா பெர்னாண்டோ இந்த அலுவலகத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டமைக்கு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்த அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக நூற்றுக் கணக்கானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love