கன்னியாகுமரியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை கரை திரும்பவில்லை. காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய-மாநிலஅரசுகள் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும், கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் தேடுதல் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நெடுஞ்சாலையில் ஒன்று சேர்ந்த பாம்பன் மீனவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து ஊர்வலமாக பாம்பன் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கு புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் போராட்டத்தையொட்டி குறித்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முற்றுகை போராட்டம் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் புகையிரதம்; 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது