Home இலங்கைஈரோஸ் ஜனநாயக முன்னணி உதயசூரியனுக்கு ஆதரவு:-

ஈரோஸ் ஜனநாயக முன்னணி உதயசூரியனுக்கு ஆதரவு:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

மக்கள் ஆணைக்கு புறம்பாக கூட்டமைப்பு செயற்படுவதனால் புதிதாக உதயமாகியுள்ள பொதுக்கூட்டணிக்கு எமது ஆதரவை வழங்க வந்துள்ளோம்.என ஈரோஸ் ஜனநாயக முன்ணனியின் செயலாளர் இரஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கொள்கைகளில் இருந்து வழி தவறி பயணிக்கின்றது. அதனால் புதிய கூட்டணி உதயமாகியுள்ளது. அது தனித்துவமான கூட்டணியாக செயற்படும். அந்த புதிய கூட்டணிக்கு எமது பூரண ஆதரவு இருக்கும். தொடர்ந்து எமது ஆதரவை நல்குவோம். எமது கட்சியினர் புதிய கூட்டணியில் கிழக்கு மாகாணத்திலும் வன்னி மாவட்டத்திலும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளோம். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More