சிபிராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சத்யா’. இதில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்;. மேலும் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த் ராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஷணம்’ படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள சத்யா திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் விஜய், சிபிராஜை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். விஜய் பாராட்டியதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சிபிராஜ் விஜய்யின ரசிகனாக பெருமைபடுகிறேன் என பதிவிட்டுள்ளார். சிபிராஜ் விஜய்யின் தீவிர ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment