166
பெங்களூரில் இருந்து கேரளா சென்ற ஆம்னிபஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பஸ் இன்று அதிகாலை சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இரும்பு தடுப்பு சுவற்றை இடித்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி தேடிய நிலையில மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 2 பேரை காயங்களுடன் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் இருந்து 43 பயணிகள் ஏற்கனவே இறங்கிவிட்டதனால் பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love