139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டடுள்ளர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் 5 பபடகுகளில் வந்து தொழிலில் ஈடுபட்ட போதே 23 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.
அவர்களின் 5 படகுகளும் காங்கேசன்துறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மலேரியா தொற்றுத் தொடர்பில் கடற்படை மருத்துவர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் 23 இந்திய மீனவர்களும் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love