Home பிரதான செய்திகள்நியூசிலாந்து அணித் தலைவராக ரொம் லாதம்

நியூசிலாந்து அணித் தலைவராக ரொம் லாதம்

by admin


மேற்கிந்திய தீவுகள்  அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணித் தலைவராக  ரொம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.  நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள்  அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி  2-0 என்ற வகையில் கைப்பற்றியுள்ளது.

இந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.   2-வது போட்டி 23 ம்திகதியும் 3-வது மற்றும் கடைசியுமான போட்டி 26 ம் திகதியும் இடம்பெறவுள்ளன.

இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில்    முதல் போட்டியில் மட்டும்   வில்லியம்சன் அணித்தலைவராக செயற்படவுள்ள நிலையில்    ஏனைய இரண்டு போட்டிகளிலும் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதனால்  ரொம் லாதம்  தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More