Home இலங்கையாழில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது

யாழில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் எனும் சந்தேகத்தில் மானிப்பாய்  காவல்துறையினரால்  இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துகொண்டு தப்பி சென்றனர்.

அவ்வேளை குறித்த பகுதியில் சிவில் உடையில் நின்றிருந்த இரு காவல்துறையினர் அதனை கண்ணுற்று வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர்.

கொள்ளையர்களிடம் இருந்து தங்க சங்கிலியையும் மீட்டு இருந்தனர்.அதனை தொடர்ந்து இரு கொள்ளையர்களையும் மானிப்பாய் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு தடுத்து வைத்து காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , இவர்கள் இருவரும் யாழின் பல பாகங்களில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு உள்ளனர் என தமது விசாரணைகளில் தெரிய வந்து உள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர்   தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More