சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாது போகிறது என நடிகர் பார்வதி மேனன் கவலை வெளியிட்டுள்ளார்.. தற்போது நடைபெற்ஞறுக்கொண்டு இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை பார்வதி மேனன் சினிமாவில் பெண்களின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட பொது அவர் மம்மூட்டியின் படமான கசபா பற்றி விழித்துப் பேசினார்.
“கசபா படம் பார்த்தேன். அப்படி ஒரு பெரிய நடிகர் பெண்ணிடம் மோசமான வசனங்களை பேசியுள்ளது (Mammootty’s Dialogues Sexist) அதிருப்தி அளிக்கிறது. சமூகத்தின் வெளிப்பாடே சினிமா என்கிறார்கள். இது போன்ற ஹீரோவை கொண்டாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என தன் கருத்தை பார்வதி பதிவுசெய்தார்.
பார்வதி பேசியதை கேட்ட மம்மூட்டி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்ததுடன், கிண்டல் செய்தனர். மீம்ஸ் போட்டு பார்வதியை மோசமாகக் கலாய்த்தனர்.
மம்மூட்டியின் ரசிகர்கள் தன்னை திட்டி, கலாய்ப்பதை கண்டு பார்வதி அஞ்சவில்லை. “நான் சொன்னதில் தவறு எதுவும் இல்லை. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு என்னை திட்டுபவர்கள் நன்றாக திட்டலாம். நல்லா கலாய்கலாம்” என மம்மூட்டி ரசிகர்களுக்கு பார்வதி பதிலடி கொடுத்துள்ளார்.
Malayalam Actress Parvathy Gets Trolled For Calling Mammootty’s Dialogues Sexist…