குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடமாகாண சுகாதார தொண்டர்கள் இன்று யாழிலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது கடந்த ஐந்து வருடங்களிற்கும் மேலாக பல போராட்டங்களை முன்னெடுத்துவந்தபோதிலும் தமது விடயத்தில் எந்தவொரு தரப்பும் உரிய பதிலை வழங்காத நிலையில் இன்று இவர்கள் வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் கதவுகளை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்
வடக்கில் 820 சுகாதார தொண்டர்கள் நீண்டகாலமாக கடமையாற்றி வரும் நிலையில் அவர்களைவிடுத்து புதியவர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்
தமது விடயத்தில் உரிய பதில் வழங்கப்படும்வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்- அத்துடன் மண்ணெண்னை கான்களையும் கையிலெடுத்த இவர்கள் உரிய பதில் தராவிட்டால் தற்கொலை செய்யப்போவதாகவும் தெரிவித்தனர் இதனால் அப்பகுதிக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது அத்துடன் வடமாகாண ஆளனரை குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.