ஓகி புயலின் தாக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 433 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தென் பகுதியில் ஓகி புயல் தாக்கியதால் பேரழிவு ஏற்பட்டதுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிற மாநிலங்களில் கரைசேர்ந்துள்ள நிலையில், இன்னும் ஏராளமான மீனவர்களைக் காணவில்லை என்பதுடன் மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், 433 தமிழக மீனவர்கள் உள்பட 619 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்திய உள்துறை அமைச்சுஇன்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு உதவியுடன் மீட்பு பணி முழுவீச்சில் நடைபெறுவதாக டெல்லியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.