Home இலங்கைஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெலிகம நகரசபை, மஹரகம நகரசபை, பாணந்துறை நகரசபை, அகலவத்தை பிரதேசசபை, பதுளை பிரதேசசபை மற்றும் மஹியங்கனை பிரதேச சபை, தெஹியத்தகண்டிய பிரதேசபை, பதியதலாவ பிரதேசசபை ஆகியனவற்றின் வேட்பு மனுக்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தகவல் வெளியிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More