Home இலங்கைஐயப்பன் விரதமிருப்பவர்களுக்கு தடை…

ஐயப்பன் விரதமிருப்பவர்களுக்கு தடை…

by admin

ஐயப்பான் சுவாமி விரதம் கடைப்பிடிப்போர், விரத நெறிமுறைகளுக்கு அமைய கறுப்பு உடை அணிந்து வருவோர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற காவற்துறை உத்தியோகத்தர்களால் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமையவ இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஐயப்பன் அடியார்கள் 60 நாள்கள் விரதம் கடைப்பிடித்துவருகின்றனர். அந்த நெறிமுறைகளுக்கு அமைய அவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிவதுடன் கறுப்பு நிறமான சால்வையை கழுத்தில் சுற்றி கால்களில் செருப்பின்றி இந்த விரதத்தை பின்பற்றுகின்றனர்.

ஐயப்ப அடியார் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக திறந்த மன்றில் முன்னிலையாகியுள்ளார். அவரின் ஆடைகள் தொடர்பில் கண்டித்த நீதிமன்றம், அவரை மன்றைவிட்டு வெளியேறுமாறு பணித்தது.

அத்துடன் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்து இவ்வாறான நபர்களை நீதிமன்றுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் மன்று கட்டளையிட்டிருந்த்து என்று தெரிவிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More