குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக கொங்கோ ஜனநாயக குடியரசின் ஆயுதக் குழுவினர் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோர் 8 மாதம் முதல் 12 வயது வரையான பெண் குழந்தைகளாவர். இந்தக் ஆயுதக் குழுவின் தலைவராக பிரடெரிக் பாடுமைக் என அழைக்கப்படும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, பாலியல் வன்முறைக்கு தண்டனை விலக்கு என்பது முடிவுக்கு வந்துள்ளதை காட்டும் அறிகுறியாக காணப்படுவதாக உள்ளூர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதிரியான குற்றங்களை பற்றி எண்ணி பார்க்கின்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக வலுவான அறிகுறி இந்த தண்டனை என பாதிக்கப்பட்டோர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சார்லஸ் குவாகா சிகுரா என்பவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கொங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கில் அமைந்திருக்கும் தென் கிவ்யு-விலுள்ள காவுமுவில் மக்கள் நிறைந்திருந்த தீர்ப்பாயத்தில் மனித குலத்திற்கு எதிரான இந்த குற்றத்திற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயேசுவின் படை என்னும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த இந்த குற்றவாளிகள் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றங்கள் செய்தததால் அவர்களுக்கு மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக ராணுவ தீர்ப்பாயம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றவாளிகள் மீதான கொலை, கிளர்ச்சி இயக்கத்தில் உறுப்பினராக இருந்தது மற்றும் சட்டப்பூர்வமற்ற முறையில் ஆயுதங்கள் வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
போரின்போது நடைபெறும் பாலியல் வன்முறை பற்றிய முன்னாள் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மார்கோட் வால்ஸ்டாம், கொங்கோ ஜனநாயக குடியரசை ‘உலக நாடுகளின் பாலியல் வல்லுறவின் தலைநகரம்’ என்று முத்திரை குத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க