154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாட்டுப் பிரஜையொருவர் இலங்கையின் பொது இடங்களில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை முகநூலில் பதிவேற்றியுள்ளார். இலங்கையில் கடுமையான பௌத்த மதக் கொள்கைகள் பின்பற்றப்படும் இடங்களில் எடுத்து இவ்வாறு நிர்வாண புகைப்படங்கள் பிரசூரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிர்வாணமாக புகைப்படங்கள் எடுப்பதற்கு இலங்கையில் அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த வெளிநாட்டுப் பிரஜை நூற்றுக் கணக்கான புகைப்படங்களை இவ்வாறு வெளியிட்டுள்ளார். இந்தப் பெண் தம்மை ரஸ்ய ஆஸி பெண் என அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love