கலை உருவாக்கம் காலத்தை பிரதிபலிப்பது. கலைஞன் தான் வாழும் சுற்றுச் சூழலில் இருந்தே தன்னுடைய படைப்பினை உருவாக்கிறான். கலை உருவாக்கத்தில் கற்பனை வளம் எவ்வளவு முக்கியமோ அதே.அளவு படைப்பாளரின் சுற்றுப்புறமும், வாழும் காலமும் அவன் படைப்பாக்கத்தை பாதிக்கின்றது. இதன் அடிப்படைகளிலே கலைகள் உருவாகின்றன. இந்தவகையில் ஓவியக்கலையின் காலத்தை ஓவியன் வாழும் சூழல் பிரதிபலிப்பதாய் உள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதனின் வாழ்க்கை கூட தொல்பொருட்களிலிருந்து கிடைக்கப்பெற்ற சிற்பங்கள் ஓவியங்களை அடிப்படையாகக்கொண்டே அறியமுடிகின்றது. அதே படைப்பாளன் படைப்பில் உண்மையாக தன்னையும், தன் காலத்தையும் கொண்டு வருவானேயானால் அவன் படைப்பாக்கம் சமூக நோக்கில் சிறந்த படைப்பாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நான்காம்வருட கட்புலமும் தொழில்நுட்பவியலும் எனும் துறையினை பயிலும் மாணவர்களில் சிலர் தங்களுடைய ஆய்வு நோக்கத்திற்காக காண்பியற் கலை கண்காட்சியினை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள் இக்கண்காட்சியில் சமகால சூழலை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்கள் காட்சிப்படுத்தியிருந்;தார்கள். ஓவியங்கள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் பல ஆறாக வடுக்களும், ஒடுக்க முறைகளும், வாழ்வியல் பிரச்சனைகளும், பாலியல் துஸ்பிரயோகங்களும் என பல பிரச்சனைகளை பிரதிபலப்பதாக படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
வடக்கு கிழக்கு போரின் பின் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை முறையினை வெளிப்படுத்துவதாக கட்புலத்துறை மாணவன் சந்திரசேகர் அனோஜனின் ஓவியங்கள் படைக்கப்பட்டிருந்தன. இவருடைய ஓவியங்கள் ‘Wu;ITE RESIDUES’ என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பிரபாகரன் பிருந்தாயினி தனது ஆய்வு நோக்கத்திற்கு ‘IN TuE NORTu’ என்ற தலைப்பில் வடக்கின் தற்போதைய அரசியல், மக்கள் வாழ்வில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்ற வகையில் இவருடைய ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவ் ஓவியங்கள் வடக்கின் அரசியல்வாதிகளையும், மக்களின் பிரச்சனைகளையும் விமர்சிப்பதாக இப்படைப்புக்கள் காணப்படுகின்றன. போருக்கு பின்னரான காலப்பகுதியில் மிஞ்சியிருக்கின்ற கட்டிடங்களின் சிதைவு தொடர்பாகவும் அத்தோடு அக்கட்டிடங்களுக்குள் வாழ்ந்த குழந்தைகளுக்கும் அவர்களின் உணர்வுகளையும் தாண்டி அக் கட்டிடங்களுக்குள் இருக்க ஏனைய பிரச்சனைகளையும் யோசிக்கும் வகையில் தவரத்னம் சிந்துஜா அவர்களின் ஓவியங்கள் ‘றுயுசு குடுழுறுநுசுளு’ என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறாக சமகால நிகழ்வுகள் தவிர்க்க முடியாதபடி ஓவியர்களின் படைப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன என்பதற்கு இவர்களுடைய ஒவியங்களில் வெளிப்படும் கருத்துக்கள் பறைசாற்றி நிற்கின்றன. முழுக்க முழுக்க போர்ச்சூழலின் பின்னரான நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்களாக இவ் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை வெறும் ஓவியமாக இல்லாமல் கருத்து பரிமாற்ற ஊடகமாகவும் செயல்படுகின்றன. இந்தவகையில் ஓவியங்களும் மிக அற்புதமான படைப்பாக்கங்களாகவே விளங்குகின்றன. இவ்வாறெல்லாம் தமிழர் மத்தியில் தோற்றம் பெற்ற சமகால ஓவியங்கள் எதிர்காலத்தில் வரலாற்று பதிவுகளாக மிஞ்சும் எனக் கருத இடமுண்டு.
இரசனை சமூகத்தின் முன்னால் வெளியிடுகின்ற கலைச்செல்வத்தின் தரம், ஓவிய சிற்பக்கலைகளை பொறுத்தவரையில் ஒரு முக்கிய பிரச்சனையாக நிலை கொள்கிறது. ஓர் இலக்கிய பிரதி வெளியிடப்பட்டவுடன் அது பொது சமூகத்திற்கு வருவதும் வாசிக்கப்படுவதும் பிறகு விமர்சிக்கப்படுவதும் போன்ற ஒரு சூழல் ஓவிய சிற்பக்கலைகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு காலகட்டத்தில் முக்கிய இலக்கிய பிரதிகளும் எழுத்தாளர்களும் எவையென்றும் யாரென்றும் மக்களிடையே விவாதிக்கப்படுவதும் அறியப்படவும் செய்கிறது. இம்மாதிரியான அறிதல் ஓவிய சிற்பக் கலைத்துறையில் கிடைப்பதில்லை அதனால்தான் மக்களுடைய ஓவிய சிற்பக்கலைகள் இருண்மையாகவே நிலைபெறுகிறது. ஆகவே இவ் போன்ற ஓவிய கண்காட்சிகள் தற்காலத்தில் அவசியப்பாடுகளாக உள்ளன. அந்த வகையில் இவ் ஓவிய கண்காட்சி பாராட்டத்தக்கதாகும். பல்கலைக்கழகங்களில் கட்புல தொழில்நுட்பமும் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் வெறுமனவே ஆய்வு தேவைக்காக மாத்திரம் இவ் போன்ற கண்காட்சிகளை ஒழுங்குபடுத்தமால் அவர்களின் ஆளுமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் இவ் கண்காட்சிகளை அடிக்கடி முன்னெடுக்க வேண்டும். இதுவே இன்றைய சமகால ஓவிய சூழலில் ஆரோக்கியமான ஒன்றாகும்.
வீ.கதீசன்
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப்பல்கலைக்கழகம்.