Home உலகம்லெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை…

லெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை…

by admin

லெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் கடமையாற்றிய 30 வயதான ரிபேகா டைகி என்ற பெண் அதிகாரியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவர் திடீரென காணாமல் போயிருந்த நிலையில் காவல்துறையினர் பல இடங்களிலும் தேடுதல் நடத்தினர். இந்த நிலையில் பெய்ரூட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகே அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ரிபேக்கா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டமை குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More