Home இலங்கை இணைப்பு 2 – மலேசிய பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

இணைப்பு 2 – மலேசிய பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

by admin

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்கிற்க்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்ற மலேசியப் பிரதமருக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு மலேசியப் பிரதமரின் இப்பயணம் இடம்பெறுவதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் மலேசியப் பிரதமரை வரவேற்பதற்கான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.

 இலங்கைக்கு வந்துள்ள மலேசிய பிரதமர்வடமாகாண முதலமைச்சரையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More