குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனப் பேரவையின் தீர்மானங்களில் உடன்பாடில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சில உயர் பதவிகளுக்கான பெயர் பரிந்துரைகளில் தமக்கு உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் கருத்து வெளியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில் அனைவருக்கும் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வுகள் தொடர்பில் அரசியல் சாசனப் பேரவையே இறுதித் தீர்மானங்களை எடுக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பக்கச்சார்பற்ற தீர்மானங்களை எடுப்பதற்கே தாம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனப் பேரவையின் சில தீர்மானங்களில் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.